கோடைவெயிலிருந்து பாதுகாத்து கொள்ள தற்காப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - தேனி ஆட்சித்தலைவர்
தேனி மாவட்டம்
கோடைவெயிலிருந்து பாதுகாத்து கொள்ள தற்காப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தற்பொழுது அதிக வெப்பம் இருந்து வருவதால் வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து தற்காத்து கொள்ள பின்வரும் வழிமுறை பொதுமக்கள் கடைபிடிக்கமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கி உள்ளார்.
உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்
ORS பானம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, கஞ்சி, எலுமிச்சை பானம், தர்பூசணி, கரும்புச்சாறு மற்றும் மோர் போன்ற நீராகரங்களை அடிக்கடி குடிக்க வேண்டும்.
பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.
முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.
மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் நண்பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரை கூடுமான வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் வெளியில் செல்லும் போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.
வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும்.
மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும்.
தாகம் இல்லையென்றாலும் போதுமான அளவு குடிநீர் அருந்த வேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடுமையான பணிகளை செய்யாமல் இருக்க வேண்டும்.
ஆல்கஹால், டீ, காபி மற்றும் கார்பனேட் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
புரதம் / மாமிச சத்துள்ள மற்றும் காரவகை உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்குமாறும், சர்க்கரை நோய், இருதய நோய், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
வெயிலில் வேலை செய்யும் போது, தொப்பி/குடை உபயோகப்படுத்த வேண்டும். மேலும் தலை, கழுத்து, முகம் போன்ற பகுதிகளை துணியால் மூடியிருத்தல் வேண்டும்.
முதியவர்களுக்கான வழிமுறைகள்
தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.
போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கால்நடைகளுக்கான வழிமுறைகள்
கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான பகுதியில் கட்டி வைத்து, அதற்கு போதிய அளவு குடிநீர் மற்றும் தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவணங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம்.
அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.
பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்து கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும்.
செல்லப்பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம்.
மேலும், வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் வயர்கள் உருகி சார்ட்சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய


