தேனியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு தினம் அனுசரிப்பு
தேனியில் தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தேனி நகர தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற நினைவு தினத்தில் தேனி மாவட்ட தலைவர் முருகேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மேலும் இந்த நிகழ்வில் நேருவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் , மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. வன்முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதே போல் அல்லிநகரம் , பொம்மையகவுண்டன்பட்டி. மற்றும் பல்வேறு பகுதிகளில் ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் வன்முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் வட்டார காங்கிரஸ் தலைவரும் தேனி ஒன்றிய துணை சேர்மனுமான முருகன் , மாநில பொதுக்குழு உறுபினர்கள் முனியாண்டி கவுன்சிலர் சின்ன பாண்டி , நகர துணை தலைவர் கவுன்சிலர் நாகராஜ், நகர பொருளாளர் சுதாகர் , மாவட்ட செயலாளர்கள் சம்சுதின் பெத்தன சாமி , அல்லிநகரம் பகுதி தலைவர் இனியவன் மற்றும் மாவட்ட வட்டார நகர காங்கிரஷ் நிர்வாகிகள் , பொதுமக்கள் பங்கேற்றனர்



