ஐ ஜே கே கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் தனிநபருக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக ஐ.ஜே.கே உள்ளிட்ட பல்வேறு கட்சியனர் சார்பாக தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டம், PC பட்டி, வாசவி காலணியில் உள்ள இடத்தின் உரிமையாளரிடம் இருந்து வரும் இடத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு பல்வேறு தொடர் தொந்தரவுகள் கொடுத்தும், கடுமையான மனஉளைச்சலுக்கும் ஆளாக்கும் அஞ்சநேயர் நகர் குடியிருப்பின் ரியல் எஸ்டேட் முகவரை கண்டித்து கவன ஈர்ப்புஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்


