Type Here to Get Search Results !

தேனி அருகே வீரபாண்டியில் கிராம கோவில் பூசாரிகள் சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது

தேனி அருகே வீரபாண்டியில் கிராம கோவில் பூசாரிகள் சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது


தேனி அருகே வீரபாண்டியில் தேனி மாவட்ட கிராமக்கோவில் பூசாரிகள் பேரவை , அருள்வாக்கு அருள்வோர் பேரவை சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கிராமக்கோவில் பூசாரிகள் பேரவையின் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர்கள் S.S.K சாமி , பழனிச்சாமி ஆகியோர் முன்னணி வகித்து அரசு சார்பில் கிராமக்கோவில் பூசாரிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் பற்றி சிறப்புரையாற்றினார்கள்.




கிராமக்கோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி மாத சம்பளமாக ரூ.10,000/- வழங்க வேண்டும்.. 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க வேண்டும் மற்றும் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வழியுறுத்தி தேனி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பூசாரிகள் முன்னிலையில் நிறைவேற்றி தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தின் தலைவர் R.ராஜா , மாவட்ட துணைத்தலைவர் பார்த்த சாரதி , மாவட்ட செயலாளர் வேல்முருகன் , மாவட்ட துணை செயலாளர் மணி , மாவட்ட பொருளாளர் முருகன் , மாவட்ட இணை பொருளாளர் கருப்பையா , சட்ட ஆலோசகர் கிருஷ்ணன் , மாவட்ட கணக்காளர் பாண்டுரெங்கன் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store