தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது
தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பாக நிலையான மாற்றத்திற்கான புதுமையான தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த 284 மாணவியர்கள், 20 பேராசிரியர்கள் பங்கேற்றனர் .தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அம்பிகா தேவி வரவேற்புரை நிகழ்த்திய இந்த நிகழ்வில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் விழாவிற்கு தலைமை உரை ஆற்றினார். உப தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல் ,பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கல்லூரி செயலாளர் காசி பிரபு துவக்க உரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இணை செயலாளர்கள் செண்பகராஜன், அருன் , முதல்வர் முனைவர் சித்ரா ,முனைவர் கோமதி ,முனைவர் சரண்யா, துணை முதல்வர்கள் சுசிலா சங்கர் ,உமா காந்தி கிருஷ்ணவேணி ,விடுதி காப்பாளர் உமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கல்லூரி செயலாளர் காசி பிரபு மாணவ மாணவியர்களின் 45 ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய பன்னாட்டு கருத்தரங்கு புத்தகத்தை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.
முதல் நாள் கருத்தரங்கில் தாய்லாந்து பல்கலைக்கழகம் முனைவர் சிவசங்கர் ராமசாமி பங்கேற்று எதிர்கால நிலையான இந்தியாவுக்கான டிஜிட்டல் கண்டுபிடிப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து மகாராஷ்டிரா கிறிஸ்து பல்கலைக்கழகத்தின் தரவு அறிவியல் துறை உதவி பேராசிரியர் விஜயலட்சுமி பங்கேற்று நிலையான வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்
இந்த நிகழ்வில் மாணவர்கள் பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினர்கள் கல்லூரி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்





