நீர்வழித்தடங்களை பாதுகாக்க கோரி தேனியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையிலும் , மாவட்ட தலைவர் வேந்தர் பாலா முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டமனூர் பகுதியில் நீர் வழி தடங்களை மறித்தும் புதுக்குளம் கண்மாயை ஆக்கிரமைத்தும் தனியார் நிறுவனம் சார்பில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததை தடை செய்யக்கோரியும் ,
அடைக்கம்பட்டி கிராமத்தினை சேர்ந்த செந்தில் , தங்கராஜ் , செல்லப்பாண்டி ஆகிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் ,தேவேந்திர குல வேளாளர் சமூதாயத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றக் கோரியும், தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு வழங்கிடக்கோரியும்
,கேரளா மாநிலத்துக்கு தேனி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பெண்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்



