தேனியில் இலவம் பஞ்சு -க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடமலை மயிலை ஒன்றிய விவசாய பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்தில் கடமலை மயிலை ஒன்றியத்தில் 5000 ஹெக்டர் பரப்பளவில் இலவம் பஞ்சு சாகுபடி செய்து வருகிறோம் என்றும் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சாகுபடி விளைச்சல் தரும் என்றும் கடந்த ஆண்டு ஒரு கிலோ இலவம் பஞ்சு விலை ரூ 120 க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ 40 -க்கும் கீழே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும், இதனால் தற்பொழுது அடிப்பு கூலிக்கு கூட கட்டாத சூழ்நிலையில் பஞ்சு வெடித்து காற்றில் பறந்து வீணாகி வருகிறது என்றும்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
இந்த பகுதியில் இலவம் பஞ்சுக்கு என்று மார்க்கெட்டும் கமிஷன் மண்டியும் இல்லாமால் இருப்பதினால் வியாபாரிகள் நோக்கில் விலையை நிர்ணயம் செய்து குறைந்த விலையில் விவசாயிகளிடம் வாங்கி வருகின்றனர் என்றும் இதனால் இந்த சாகுபடியினை நம்பி உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையிலும்
குடும்ப அடிப்படை செலவிற்கே வழி இல்லாமால் இருந்து வருகின்றனர் என்றும் இது குறித்து ஏற்கனவே தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இது வரை எவ்வித நடைவடிக்கை இல்லை என்றும் , மேலும் இலவம் பஞ்சு மரங்கள் இருப்பதினால் மற்ற விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது என்றும்
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 100 என்ற விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்
மேலும் இலவம் பஞ்சு விவசாயத்தில் தற்பொழுது கிடைக்கும் வரவ செலவு







