தேனி அருகே கோடாங்கிபட்டியில் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் கோடங்கிபட்டியில் உள்ள மனிதநேய காப்பகத்தில் உலக சாதனையாளர்களுக்கு சான்றிதழ் விருது வழங்கும் விழா மற்றும் மனிதநேய டிரிம்ஸ் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. முதலில் பள்ளியின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
யோகா கலையில் உலக சாதனை புரிந்த காப்பககுழந்தைகள் தனலட்சுமி ,செந்தாமரை மற்றும் 12 மணி நேரம் யோகா மற்றும் சிலம்பம் சுழற்றி சாதனை புரிந்த 75 மாணவர்களுக்கு சான்றிதழ் ஆல் இந்தியா வேர்ல்ட்புக் ஆஃப் ரெகார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன் புலவர் சந. இளங்குமரன் ஆகியோர் வழங்கினார்கள்.
கலைவானி எழுதிய "என் பார்வையில் தொல்காப்பியம்" நூல் வெளியிடப்பட்டது .
தொடர்ந்து
மனிதநேய காப்பக மாணவர்கள், மனிதநேய டரீம் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் அனைவரையும் பாராட்டும் விதமாக அமைந்தது.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
இந்த நிகழ்வில் தேனி மேலப்பேட்டை கல்வி நிறுவனங்கள் தலைவர் ராஜ் மோகன், தொழிலதிபர் AMRR சந்திரகுமார்குமார், ஏ எம் ஆர் குரூப் ஆப் கம்பெனி மருத்துவர் கண்ணன் போஜராஜ், குருதிக்கொடை வள்ளல் ஸ்டார் நாகராஜ் ,குறிஞ்சி மணி ,ஐஸ்வர்யா ஸ்டோர் ராஜமாணிக்கம் ,98 வயது பெரிய கருப்பன் ,நாணயம் சிதம்பரம், கலந்து கொண்டு சாதனை மாணவ மாணவிகளைவாழ்த்தியும் கல்வி கற்பதனால் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் வேலை வாய்ப்பினை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை பற்றியும் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக பிசி பட்டி வெளிச்சம் அறக்கட்டளை நண்பர்கள் குடிநீர் வழங்கினர்.உலக அமைதி குழு தன்னார்வலர்கள் சார்பில் மனிதநேய முன்னாள் மாணவர்களின் சேவையை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. பசுமை தேனி சார்பாக சர்ச்சில் துரை நன்றி கூறினார்.இந்த நிகழ்வின் முக்கிய நிகழ்வாக மனித காப்பியத்தின் மாணவிகள் யோகாசனம் செய்தது பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது மேலும் இந்த நிகழ்ச்சியில் கோடாங்கிபட்டி கவுன்சிலர்,மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் சமூக அலுவலர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்










