தேனியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அனைத்து வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெயர் பலகை திறந்து தொழிலாளர்கள் ஒற்றுமை குறித்து கோசங்கள் எழுப்பப்பட்டது.தொடர்ந்து ஊர்வலமாக தேனி பழனிசெட்டிப்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோவிலில் சங்கத்தின் சார்பில் சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.
இந்த சிறப்பு பூஜையில் சங்கத்தின் நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.பழனிசெட்டிபட்டி, தேனி ,வீரபாண்டி முத்து தேவன் பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கும் ,போக்குவரத்து பயனாளிகளுக்கும் சங்கத்தின் சார்பில் இனிப்புகள் வழங்கி சிறப்பித்து தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் சலீம் ராஜா,செயலாளர் கார்மேகம்,பொருளாளர் இளங்கோவன்,துணைத் தலைவர் ரமேஷ்,துணைச் செயலாளர் முத்து மணி,இணை செயலாளர்செந்தில் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்,நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்








