Type Here to Get Search Results !

ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர் தினத்தில் கோரிக்கை வைத்த இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தினர்.

 ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர் தினத்தில் கோரிக்கை வைத்த இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தினர்.


தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சி முன்பாக இந்திய ஜனநாயக தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் மே1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் பெயர் பலகை திறந்து வைத்தும் கொடியேற்றியும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சங்க நிர்வாகிகள் சார்பில் கொண்டாடப்பட்டது .மேலும் சங்கம் சார்பில் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த தமிழக அரசு ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க கோரியும் ,பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் செயல்படுத்தக்கோரியும்  மற்றும் மறுக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் தர வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தினத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.


மே 1 தொழிலாளர் தினத்தில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தேனி அல்லிநகரம் நகராட்சி  கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார் .பொருளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார் .மேலும் இந்த நிகழ்ச்சியில் அனுமந்தம்பட்டி பேரூராட்சி கிளை தலைவர் ரேணுகாதேவி பங்கேற்று கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார் .சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஜெகநாதன் ,மாவட்டத் தலைவர் நடராஜன் செயலாளர் பிச்சைமுத்து ஆகியோர் பங்கேற்று நகராட்சி ஊராட்சி பேரூராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தொழிலாளர் தினம் எதற்காக கொண்டாடப்பட்டது என்பதை குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பெண்கள் பொது மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store