வீரபாண்டி கௌமாரி அம்மன் திருக்கோவிலில் தேவாரம் திருஞானசம்பந்தர்சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது
தேனி அருகே வீரபாண்டியில் மிகவும் பழமையான கௌமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். மேலும் இந்த திருக்கோவிலில் தற்பொழுது செவ்வாய்க்கிழமை முதல் சித்திரை திருவிழா நடைபெற்ற வருகிறது
சித்திரை திருவிழாவின் இரண்டாவது நாளான புதன்கிழமை இன்று தேவாரம் திருஞானசம்பந்தர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கௌரி அம்மன் திருக்கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத் திட்டத்தை எஜமான் பாண்டி முனீஸ்வரர் பங்கேற்று தொடங்கி வைத்தார் காலை முதல் தொடங்கப்பட்ட இந்த அன்னதானம் மாலை வரை நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இந்த அன்னதான திட்டத்தில் அன்னதான உணவறிந்தி பயன் பெற்றனர்
உங்கள் செய்திகளும் இலவசமாக இடம்பெற
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் செய்திகள் சரியாக இருந்தால் ஆய்வுக்குப் பின் வெளியிடப்படும்


