தேனி அருகே கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எழில் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது
தேனி அருகே கோட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கோட்டூர் எழில் கல்வியியல் அறக்கட்டளை சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.
புதிய மாணவர்கள் வரவேற்பு விழா, சென்ற கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.கலந்த கல்வியாண்டில் 10 ,11 , 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கேடயங்கள், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது .
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கோட்டூர் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கோட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி டி முத்துவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாலா காமராஜ் பாண்டியர் குல வணிகர் சங்க செயலாளர் கேசவராஜா தமிழக வெற்றிக் கழக ஒன்றிய பொறுப்பாளர் மணிமாலா, ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் நல்லமுத்து , மேகலா கணேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இலக்கியா முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்று கேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர்
எழில் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பாலமுருகன்,மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு கால்பந்து அணி தலைவர் திரு செண்பக ராஜன், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் வரவேற்பு உரை நிகழ்த்தினார்கள் கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி தொடக்க உரை நிகழ்த்தினார் சிறப்பு பண்பாற்றினர்.கோட்டூர் எழில் கல்வியியல் அறக்கட்டளையின் நிறுவனர்&தலைவர் தாமரைச்செல்வன் வழிகாட்டுதலின்படி எழில் பண்பாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பள்ளியின் அலுவலர்கள் ,மாணவர்கள் ,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் , சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்






