தேனி அருகே வீரபாண்டியில் தொழிலதிபர் சசிக்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் திமுக பிரமுகராவர்
மேலும் தேனி பெரியகுளம் ஆண்டிபட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் அன்னதான கூடம் கட்டி இலவசமாக வழங்கி உள்ளார். ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். இவருடைய பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாள் விழாவில் தேனி அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்த ஹீரோ ஸ்டார் நண்பர்கள் , இளைஞர்கள் சார்பில் கௌமாரியம்மன் திருக்கோவிலில் சசிகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .
இதேபோல் தேனி மாவட்டத்தினை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் வருகை புரிந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .
இந்த நிகழ்வில் முன்னாள் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் PT முத்துவேல்முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்பாலா காமராஜ், வார்டு மெம்பர்கள் கிராம பொதுமக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வீரபாண்டி சத்திரப்பட்டி வயல் பட்டி அரண்மனைப்புதூர், சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் நேரடியாக வருகை புரிந்து சால்வை அணிவித்து தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது







