ஆண்டிபட்டியில் ஸ்ரீ நாகராஜ , நாகம்மாள் கோவில் ஆடித் தபசு விழா.
ஆண்டிபட்டி .ஆக. 7 -
ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் உள்ள ஸ்ரீ நாகராஜ ஸமேத நாகம்மாள் கோவிலில் 21 ஆம் ஆண்டு ஆடித்தபசு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் கிரகத்திடலில் இருந்து அம்மன் புறப்பாடாகி ஊரின் முக்கிய வீதிகளில் உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 2ம் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் அக்னி சட்டி, 3ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் அம்மனுக்கு பல்வேறு தீர்த்த வழிபாடும், 21 திரவிய அபிசேகமும், தீபாராதனையும் காட்டப்பட்டது.
பெண்கள் மூலஸ்தானத்திற்கு பின்புறம் உள்ள சுயம்பு புற்றுக்கு முட்டை, பால் ,மஞ்சள் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மாலை அம்மன் பூஞ்சோலை அடையும் நிகழ்ச்சி நடைபெறும் .விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


