தேனியில் ஊர்க்காத்த மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது
தேனிஅருகே அல்லிநகரம் பஜனை தெரு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஊர் காத்த அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .இந்த திருக்கோவிலில் தமிழ் வருட பிறப்பு ,தைத்திருநாள் மற்றும் முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகள் சிறப்பு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
மேலும் ஆடி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடத்துவது வழக்கம் . அதேபோல் இந்த வருடத்தில் ஆடித்திருவிழா நடைபெற்றது .முதல் நாள் நிகழ்வில் ஊர் காத்த மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது .
இரண்டாவது நாள் திருவிழாவாக சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த சிறப்பு அன்னதானத்தில் அல்லிநகரம் பொம்மையைகவுண்டன்பட்டி, தேனி ,அன்னஞ்சி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த அன்னதானம் ஏற்பாடுகளை கோவில் பூசாரி பிச்சைராஜ் மற்றும் ஊர்க்காத்த அம்மன் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்







