தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமமுக நிறுவன தலைவருக்கு பொதுமக்கள் வரவேற்பு
திண்டுக்கல்லில் 24.8.2025 அன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெள்ளி விழா சமூக சமத்துவமாநில மாநாடு நடை பெற உள்ளது. இதனால் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமாகிய டாக்டர் பெ. ஜான் பாண்டியன் மாநில மாநாடு வெற்றி அடைய தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்
இந்நிலையில் தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனுக்கு தேனீ கிழக்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் தேனி மாவட்டத்தில் (16 .8. 2025)25ஆம் ஆண்டு வெள்ளி விழா சமூக சமத்துவமாநில மாநாடு திண்டுக்கல்லில் 24.8.2025 அன்று நடைபெறும் மாநாட்டுக்கு பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் கண்டமனூர் ,வருசநாடு,காமராஜபுரம், அம்மாச்சியாபுரம் ,குன்னூர், ஆண்டிபட்டி, கோவில்பட்டி
,குள்ளபுரம், மருகால்பட்டி, ஜெயமங்கலம், பெருமாள் கோவில் பட்டி பெரியகுளம், இந்திராபுரி தெரு தாமரைக் குளம், அல்லிநகரம் மற்றும் பல்வேறு கிராமங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர் உறவுமுறை தலைவர் செயலாளர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து மாநாட்டிற்கு வருகை புரியும் வகையில் அழைப்பிதழை வழங்கி சிறப்பித்தார்.
மேலும் தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியனுக்கு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது







