தேனி அருகே அம்மாச்சியாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர் . இதே போல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அம்மாச்சியாபுரம் கிராமத்தில் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அம்மாச்சியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அரசு சார்ந்த வருவாய் துறை மருத்துவ துறை ,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை உள்ளிட்ட துறை அலுவலர்களும் பங்கேற்றனர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று தங்களின் மனுக்களை பதிவு செய்தனர். மேலும் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் PDO அய்யப்பன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலர் லட்சுமி ,ஊராட்சி செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் பல்வேறு அரசு திட்டங்களுக்கு உடனடியாக பயனாளிகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது

