ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டியில் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும் தேமுதிக நிறுவன தலைவருமாகிய விஜயகாந்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
உலகம் முழுவதும் உள்ள கேப்டன் விஜயகாந்தின் தொண்டர்கள் , ரசிகர்கள் , கட்சி நிர்வாகிகள் சார்பில் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளினை வறுமை ஒழிப்பு தினமாகவும் கொண்டாடி வரும் நிலையில் எரதிமக்காள்பட்டியிலும் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கிராமத்தில் விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்திடவும் , விஜயகாந்தின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக மேலும் அவருடைய தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்றும் கூறி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
மேலும் வறுமை ஒழிப்பு தினத்தினை கொண்டாடும் வகையில் சிறப்பு அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது . அன்னதானத்தை தேனி தெற்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சதிஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
மேலும் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா கெளரவ தலைவர் முருகன் தலைமையிலும், மாவட்ட பிரதிநிதி நாகராஜ்,கிளை தலைவர்கள் நல்லையா, அசோகன் ,கிளை செயலாளர்கள் மணிக்கண்ணன், சேகர் ,பொருளாளர்கள் வினோத் குமார், மதுரை வீரன்,துணை செயலாளர் - நவநீத கிருஷ்ணன்கிளை நிர்வாகிகள் சுப்பிரமணி கிளை ஒருங்கிணைப்பாளர் சன்னாசி ஆகியோர் முன்னிலையிலும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் ஏற்பாடுகளை எரதிமக்காள்பட்டி இரண்டு கிளை நிர்வாகிகள் செய்துருந்தனர். மேலும் இந்த பிறந்த நாள் விழாவில் தேமுதிக நிர்வாகிகள் , கிராம பொது மக்கள் பங்கேற்றனர்













