Type Here to Get Search Results !

ஆண்டிபட்டி அருகே 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை கட்டி முடித்து குடமுழுக்கு விழா நடத்தை கோரி இந்து முன்னணி சார்பில் மனு

ஆண்டிபட்டி அருகே 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை கட்டி முடித்து குடமுழுக்கு விழா நடத்தை கோரி இந்து முன்னணி சார்பில் மனு


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ஆட்சி கார்த்திக் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் இந்த மனுவில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜதானி கிராமத்தின் அருகில் சுமார் 1400 வருடம் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்து உள்ளது இந்த திருக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றது என்றும் மேலும் இந்த திருக்கோவிலானது தமிழரின் வரலாற்றில் பெருமையை அறியும்படி பாரம்பரியான கல்வெட்டுகள் அதிகம் இருந்து வந்துள்ளது என்றும்,

இந்த திருக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் உற்சவர் ராஜதானி சித்தார்பட்டி கே கே புரம் கதிர் நரசிங்கபுரம் வீரசின்னம்மாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிட்டத்தட்ட 15 கிராமத்திற்கு  மேற்பட்ட ஊர்களில் வீதி உலா வருவதும் , ஏராளமான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்தும் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்து மகிழ்ச்சியுடன் வழிபட்டு வந்தனர் என்றும்

.அந்த திருக்கோவில் முற்றிலும் சேதமடைந்து பழுதான நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்பு அனைத்து ஊர் பொதுமக்களும் சேர்ந்து புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த திட்டமிட்டனர் என்றும்,

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்






தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய




 அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தில் வருகிறது என்றும் அதனால் நீங்கள் புணரமைப்பு  செய்திட அனுமதி இல்லை என்றும் நாங்கள் கோயிலை அறநிலையத்துறை மூலம் கட்டி மக்கள் வழிபாட்டுக்கு வழிவகை செய்கிறோம் என்று கூறி இந்து சமய அறநிலை துறை சார்பில்வாக்குறுதி அளித்துள்ளனர் என்றும் ,அவர்கள் வாக்குறுதி கொடுத்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் கோவில் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அறநிலையத்துறை அலுவலகத்தில் கோவில் கட்டுவது சம்பந்தமாக தகவல் கேட்டதற்கு எந்த பதிலும் சரியாக வருவதில்லை என்றும் , கோவிலுக்கு நிதி ஒதுக்கி வருகிறோம்  என்று கூறும் அறநிலையத்துறை இதுவரை கோவில் கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கை எடுக்கமால் இருப்பது அந்த பகுதியில் உள்ள பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்றும்

இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் இந்த பகுதி பக்தர்கள் பயன்பெறும் வகையில் நேரடியாக கோயில் விசயத்தில் தலையிட்டு பாரம்பரியமான கோயிலை அறநிலைத்துறையில் கோயிலுக்கு ஒதுக்கும் நிதியில் மீனாட்சி சுந்தரேசர் ஆலயத்தை எழுப்பி குடமுழுக்கு நடத்தி கோயிலை பக்தர்கள் வழிபாட்டுக்கும் பொது மக்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறிமனு அளித்தனர்.இந்த நிகழ்வின்போதுஇந்து முன்னணி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store