தேனி அருகே வீரபாண்டியில் வ உ சிதம்பரனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
கப்பலோட்டிய தமிழன் என்று கூறப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பிள்ளை அவர்களின் 154-வது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது இதே போல் தேனி மாவட்டம் வீரபாண்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது .இந்த விழாவில் முதலில் வேளாளர் உறவுமுறை சங்கத்தின் சார்பில் சங்கத்தின் நிர்வாகிகள் கிராமப் பொதுமக்கள் இளைஞர் அணியினர் பங்கேற்று வ உ சி யின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
தொடர்ந்து வேளாளர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக வீரபாண்டி பேரூராட்சி மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பொங்கல் பிரசாதம் அன்னதானமாக வழங்கிபிறந்தநாள் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் வேளாளர் உறவுமுறை சங்கத்தின் நிர்வாகிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் பொதுமக்கள் பல்வேறு கட்சி நிர்வாகிகள் சமூக அலுவலர்கள் பங்கேற்றனர்


