மின் மயானம் அமைத்தால் பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்டம் 15வது வார்டு கிழக்கு தெரு வீரபாண்டி பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்வீரபாண்டி கிராமத்தில் வார்டு எண் 15 இல் கிழக்குப் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம் என்றும் இதே பகுதியில் புல எண் 1093 அமைந்துள்ளது என்றும் இந்த இடத்தில் தற்பொழுது பேரூராட்சி சார்பில் எரி தகன மேடை அமைத்து வருகின்றனர் என்றும். இந்த எரி தகன மேடை அமைப்பதனால் சுற்று வட்டார கிராமங்கள சேர்ந்த பிரோதங்கள் தேனிக்கு அடுத்தபடியாக வீரபாண்டிக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும், இப்படி நாள்தோறும் பிரோதங்கள் இந்த இடத்தில் எரிப்பதினால் சாம்பல் துகள்கள் கலந்த நச்சுப் புகையினை சுவாசித்து பொதுமக்களுக்கு நுரையீரல் தொற்றுகள் ,ஆஸ்துமா தொற்று போன்ற மேலும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ,கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் வயதான முதியோர்களுக்கும் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகை செய்ய வாய்ப்புள்ளது என்றும், தற்பொழுது மின் மயானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சுற்றி பொதுமக்கள் அதிகமாக வசித்து வரும் நிலையிலும்,
புஞ்சை நிலங்களும் அதிக அளவு உள்ளது என்றும் இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகமாக ஏற்பட்டு விவசாய பணிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் ,
மின்மயானம் அமைப்பதற்கு தேவையான வரன்முறை பின்பற்றாமல் தற்பொழுது கட்டப்பட்டு வரும் நிலையில் வீரபாண்டி பேரூராட்சி சார்பில் பொதுமக்களிடையே கருத்துக்கணிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்றும்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
இதனால் இந்த இடத்தில் மின் மயானம் கட்டுவதினால் பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அதிக அளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த மின் மயானம் கட்டுவதை தடை செய்து மாற்று இடத்தில் பொது மக்களின் கருத்துகளை கேட்டு மின் மயானம் அமைக்க வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் மயானம் கட்டுவதினை தடை செய்து மாற்று இடத்தில் மக்களின் கருத்துகளைக் கேட்டு மின் மயானம் கட்ட வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்





