தீபாவளி திருநாளில் மதுக்கடைகளை மூட வேண்டும் இந்து மக்கள் கட்சியின் தொண்டரணி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் வருகின்ற 20 10 2025 அன்று தீபாவளி திருநாள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட உள்ளது என்றும் ,இந்த திருநாளில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழும் நிலையில் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருந்ததால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மது பழக்கத்திற்கு அடிமையாகி மது அருந்திவிட்டு குடும்பத்தில் உள்ள அனைவரையும் சித்திரவதை செய்து வருகின்றனர்
என்றும் ,மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதன் மூலம் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது என்றும், இதனால் அனைத்து மக்களும் தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக கொண்டாடும் வகையில் 19 10 2025 -20 10 2025 ஆகிய இரண்டு தினங்கள் மதுக்கடைகளை மூடவும் மதுக்கடைகளை மூடிய நேரத்தில் கள்ள சந்தையில் மது விற்பனை தடுக்க வேண்டும் என்றும் கூறியும்
சென்னை கோவை மற்றும் அண்டை மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து தீபாவளி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடி மீண்டும் அப்பகுதிக்கு செல்லும் வண்ணமாக 21.10 - 2025 அன்றும் பொது விடுமுறை அளித்து 22-10-2025 வரை சிறப்பு பேருந்துகள்தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய






