தேனி மாவட்டத்தில் கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் ஒரு கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்திட இலக்கு
தேனி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் தேனி மாவட்டம் சார்பில் 38 லட்சத்துக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதே போல் இந்த வருடம் காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா தேனி பழைய பேருந்து நிலைத்தில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்று மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கதர் விற்பனையை ஊக்கப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு தொடங்கி வைத்தார்
.மேலும் இந்த வருடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட கதர்கிராம தொழில் வாரியத்தால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர் , தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் 10 மாத தவணை முறையில் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும்

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து கதர் அங்காடிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் துவக்கப்பட்டுள்ள தற்காலிக கதர் விற்பனை நிலையங்களில் கதர் ரகங்கள் வாங்குவதன் மூலம் கிராமப்புற ஏழை எளிய நூற்போர்கள் மற்றும் நெய்வோர்களின் வாழ்வில் ஒளி யேற்றிட வேண்டும் என்று
அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த விழாவில் கதர் கிராம தொழில் வாரியம் திண்டுக்கல் உதவி இயக்குனர் அருள் செல்வன் மற்றும் வாரிய பணியாளர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்