மத்திய மாநில அரசு சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடும்ப அட்டை வழங்கப்பட்டு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது .மேலும் ரேசன் இலவச பொருட்களும், வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் உரிய நபர்களுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் ரேசன் பொருட்கள் அனைத்தும் கடத்தப்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கிலும், பல்வேறு செயல்பாடுகளை தமிழக அரசு சார்பில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள 77 கூட்டுறவு சங்கங்கள் மூலம் மொத்தம் 403 முழு நேர ரேஷன் கடைகளும்,123 பகுதி நேர ரேஷன் கடைகளும் மொத்தம் 526 ரேஷன் கடையில் தேனி மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.
சினிமா செய்திகளுக்கு
https://youtu.be/YTmfpngXnfQ?si=CA0reqZD3ejdx_zn
https://youtu.be/iCB2o0u9Ovs?si=LwGzhMDjqIuoM7kE
https://youtu.be/UIEvBVaTCkM?si=suMQHC6WkWqle63r
மேலும் ரேசன் பொருட்கள் அனைத்தும் கியூ ஆர் கோடுகள் மூலம் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் தேனி மாவட்டத்தில் மொத்தம் 200 கடைகளில் கியூ ஆர் கோடுகள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் குடிமைப் பொருள் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


