தேனியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் பாலையா செயலாளர் வணங்காமுடி பொருளாளர் பி எம் ராஜு துணைத் தலைவர் கந்தசாமி ,துணை செயலாளர் குபேந்திரன் ஆகியோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 91 மாதம் வழங்காமல் உள்ள DA நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்கக் கோரியும்,வரும் காலங்களில் DA நிலுவை தொகையினை பென்ஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என்று கூறியும், போக்குவரத்து கழகங்கள் உள்ள வரவு செலவு திட்டத்தினை ஒழுங்கு படுத்தி சரி செய்ய வேண்டும் என்று கூறியும், 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறியும்,
ஓய்வு பெற்றவர்களுக்கு அனைத்து பண பலன்களை உடனடியாக வழங்க கோரியும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க கோரியும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . தேனியில் உள்ள பூதிப்புரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக வருகை புரிந்த்து தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்



