தேனியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு மாவூற்று வேலப்பர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவூற்று வேலவருக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டன. மேலும் இந்த சிறப்பு பூஜையில் ஆண்டிபட்டி ,தேனி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து தங்களின் நேர்த்திக்கடன்களை தொடங்கி வைத்தனர் .இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு சென்று பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் ஆண்டிபட்டியில் இருந்து இயக்கப்பட்டது .இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்தினர்
இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளும் ,சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன



