தேனியில் பேரூராட்சி சேர்மன் திருப்பதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் கூறிய சமூக ஆர்வலர்கள்
தேனியில் பேரூராட்சி சேர்மன் திருப்பதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் கூறிய சமூக ஆர்வலர்கள்தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சிபுரத்தினை சேர்ந்தவர் திருப்பதி .இவர் போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். மேலும் மீனாட்சிபுரம் பகுதி மக்களின் நன்மதிப்பினை பெற்று மீனாட்சிபுரம் பேரூராட்சியின் சேர்மனாகவும் தேர்வு செய்யப்பட்டார் . இந்நிலையில் மீனாட்சிபுரம் பேரூராட்சியின் சேர்மன் திருப்பதியின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தினை சேர்ந்த பல்வேறு சமூக ஆர்வலர்கள் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .மேலும் புது வருடத்தில் பிறந்த திருப்பதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தொழிலதிபர்கள் ,சமூக அலுவலர்கள் ,அரசியல் கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை கூறினார்கள்


