Type Here to Get Search Results !

தேனி அருகே லட்சுமிபுரத்தில் எம்.கே.எம் சட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது

தேனி அருகே லட்சுமிபுரத்தில் எம்.கே.எம் சட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது 


தேனி அருகே லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே எம்கேஎம் சட்ட அலுவலகம் & வினோரா லா அசோசியட்ஸ் திறப்பு விழா நடைபெற்றது .தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டின், மேனகா மில் இயக்குனர் மணிவண்ணன், எல்.எஸ். மில்ஸ் இயக்குனர் எல்.எஸ்.பிரபாகரன் ,ஆக்கியோர் தலைமையிலும்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், TMHNUகல்வி குழுமங்களின் பொதுச் செயலாளர் ஆனந்தவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


மேலும் இந்த சட்ட அலுவலகத்தினை தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்ரமராஜா பங்கேற்று ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்

மேலும் விக்ரமராஜா செய்தியாளர் சந்திப்பில்  



வழக்கறிஞர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் ஆரம்ப காலங்கள் முதல் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சட்ட அலுவலகம் செயல்படும் என்றும்


புதிய பாரதிய நியாய சங்கஹிதா சட்டப்படி, சாலை விபத்து ஏற்படுத்தி தப்பிச் செல்லும் (ஹிட் அன்ட் ரன்) வழக்கில், 2 ஆண்டுகளாக சிறை தண்டனை 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து, மகாராஷ்டிர மாநிலத்தில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தப்படும் நிலையில், லாரி உரிமையாளர்களை அரசு முறையாக அழைத்து பேச வேண்டும்.


 60 கிலோமீட்டருக்கு ஒரு டோல்கேட் அமைக்கப்பட்டு வரி வசூல் செய்யப்படுகிறது .அனைத்து டோல்கேட்டுகளை அகற்ற வேண்டும் என்றும்,


தூத்துக்குடி , மற்றும் பல்வேறு மாவட்டங்களில் புயல் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் 5000க்கும் மேற்பட்ட வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,


வணிகர்களுக்கு gst ,உற்பட பல்வேறு வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் , டோல்கேட் வரி வசூல் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றும் ,

சினிமா செய்திகள் பார்ப்பதற்கு

https://youtu.be/9UOk8cP_Sac?si=fQXwO_auve21Y6Lq


https://youtu.be/6CpQlwFR3dQ?si=uCqBrfAuExVXYC1-




வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு சார்பில் ஒரு லட்சம் கடன் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் வணிகர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க வேண்டும் என்றும் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வணிகர் சங்கம் சார்பில் கணக்கெடுப்பு  முதல்வரை சந்திக்க உள்ளோம் என்றும் ,10 ரூபாய் சாப்பாடு இங்கு வழங்கப்படுகிறது. இந்த பணியினை பாராட்டுகிறேன் என்றும் கூறினார்

மேலும் இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக பேரமைப்பு மாநில துணைத்தலைவர் கே.எஸ்.பெருமாள், பேரமைப்பு மாவட்ட செயலாளர் வி.திருவரங்கப்பெருமாள்,மாநில இணைச்செயலாளர் காளிமுத்து ,பேரமைப்பு மாவட்ட பொருளாளர் சி.அருஞ்சுனை கண்ணன் ஆகியோரும் தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்புகௌரவத் தலைவர் AMRRசந்திரகுமார், TMHNU கல்வி நிறுவனங்களின் தலைவர் T.ராஜமோகன் B.Sc.,,CHARMAN, KALAPINDIYAN GROUP OF INSTITUTIONG காலப்பாண்டியன் , பொதுச்செயலாளர் தமிழ்நாடு வேம்பு & உயிர் உற்பத்தி சங்கம் P.கருணாகரன் MA, GEMCR. TECH PVTATO .Ln.KAradaகிருஷ்ணன் ,DC-PST SCHOOLING பெஸ்ட் ரவி ,FOUNDER, STATE PRESIDENT GLOBAL LAW FOUNDATION R.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ,


மேலும் சட்ட அலுவலகம் திறப்பு விழாவை முடித்தவுடன் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் எம் கே எம் முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ,பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர்.


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் எம் கே எம் முத்துராமலிங்கம்,தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராஜன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 






கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store