தேனி மக்களே ஒரே நாளில் இரண்டு ஜாக்பாட்
தேனி மாவட்டத்தில் 10 - 2 -2024 சனிக்கிழமை ஒரே நாளில் இரண்டு சூப்பர் நிகழ்வுகள் நடைபெற உள்ளது .மேலும் இந்த நிகழ்வானது இளைஞர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருப்பதினால் இளைஞர்கள் பெண்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
தமிழக அரசின் முன்னோடி திட்டமாக இருந்து வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது இரண்டு வட்டாரத்தில் 30 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்திற்கு மார்க்கெட்டிங் பிரின்டிங் ,சந்தை இணைப்புகள் / ஏற்றுமதி இறக்குமதி ,தர நிலப்படுத்ததால், நிதி சேவைகள், புதுமை யுக்திகள்,போன்றபோன்ற சேவைகள் தேவைப்படுகிறது தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் தங்களது தொழில்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உயர்ந்த செயல்களையும் ஒரே நிலையத்தில் பெற தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் சனிக்கிழமை 10/2/2024 அன்று தேனியில் நடைபெற உள்ளது .மேலும் தேனியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் உழவர் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளதால் இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் மகளிர் தொழில் முனைவோர் தங்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும், விபரங்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலரை 9385299 717 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மற்றொரு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது அதாவது தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ,ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் இன்ஜினியரிங் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கை நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையும், டிப்ளமோ நர்சிங் உட்பட இதர கல்வி தகுதி உடையவர்களும் இதில் பங்கேற்கலாம் என்றும் ,இந்த முகாமுக்கு பங்கேற்க வரும் பொழுது இளைஞர்கள் பெண்கள் அனைவரும் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல் ஆதார் நகல் மற்றும் இதர சான்றிதழ்களின் நகங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் ,தெரிவிக்கப்பட்டுள்ளது .




