காய்கறி கழிவுகளை அகற்றக்கோரி இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் உழவர் சந்தை எனப்படும் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் தேனி அல்லி நகரத்தில் தமிழக அரசு சார்பில் உழவர் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த உழவர் சந்தைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிந்து தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்று வருகின்றனர்.
மேலும் இந்த உழவர் சந்தை அருகிலேயே தாலுகா அலுவலகம், மாவட்ட நூலகம், கனரா வங்கி பயிற்சி மையம், பூ மாலை வளாகம் மற்றும் பல்வேறு குடியிருப்புகள் இந்த பகுதியில் அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவு வருகை புரியும் இடமாகவும் திகழ்ந்து வருகிறது இந்்நிலையில் உழவர் சந்தைகளில் வீணாக்கப்பட்ட கழிவு காய்கறிகளை உழவர் சந்தை அருகிலேயே கொட்டப்படுவதால் அந்தப் பகுதியில் செல்லும் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் துர்நாற்றம் வீசி நோய் தாக்குதல் அபாயம் உள்ளதாகவும் இதனால் இந்த காய்கறி கழிவுகளை உடனடியாக உழவர் சந்தை நிர்வாகம் அகற்ற வேண்டும் என்றும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது


