தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு – தேர்தல் பொது பார்வையாளர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 33. தேனி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.கெளரங் பாய் மக்வானா, இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், உதவி பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (29.03.2024) நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சிறப்பாக பணியாற்ற வேண்டும். அமைதியான முறையில் சுதந்திரமாக தங்களது வாக்குகளை வாக்காளர்கள் செலுத்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எவ்வித பாரபட்சமுமின்றி நடுநிலையாக செயல்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்கள், கோரிக்கைகளை உடனுக்குடன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேனி மாவட்டத்தில் உள்ள 06 சட்டமன்ற தொகுதிகளின் விவரங்கள், வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்தும், தேர்தல் விழிப்புணர்வு பணிகள் குறித்தும், வாக்குப்பதிவு அலுவலர்கள், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை மற்றும் குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கைகள் மற்றும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொறுப்பு அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
மேலும், தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் விவரங்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு விவரங்கள் மற்றும் தேர்தல் மைய கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், வரப்பெற்ற புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊடகசான்றளிப்பு மற்றும் கண்காணிப்புகுழுவின் செயல்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகள் தேர்தல் பொதுபார்வையாளர் திரு.கெளரங் பாய் மக்வானா. இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய


