Type Here to Get Search Results !

தேனியில் மாவட்ட அளவிலான இயற்கை விவசாய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

தேனியில் மாவட்ட அளவிலான  இயற்கை விவசாய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.


தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் தேனி மாவட்டத்தின் வேளாண்மை துறை சார்பில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான இயற்கை விவசாய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.



தேனி வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் வரவேற்புரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி சஜுவனா குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார் .மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்


தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் ப்ரிதா  தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் ,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ராஜபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் தோட்டக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பயிர் பாதுகாப்புத்துறை இணை பேராசிரியர் தலைவர் முனைவர் சுகன்யா கண்ணா , மாநில திட்டத்தின் வேளாண்மை துணை இயக்குனர் தேன்மொழி, மத்திய திட்டத்தின் வேளாண்மை துணை இயக்குனர் ராஜசேகர் தேனி உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குனர் சாந்தி ,தேனி நுண்ணீர் பாசன திட்டத்தின் வேளாண்மை துணை இயக்குனர் சுரேஷ் ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை துணை இயக்குனர் வளர்மதி, வீரபாண்டி பாரம்பரிய நெல் விவசாயி கார்த்திகேயன்,தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா ,தேனி வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர் ராஜ் ,தேனி விதை சான்று துறை வேளாண்மை உதவி இயக்குனர் திலகர் ,காமாட்சிபுரம்  அறிவியல் நிலையத்தில் மகேஸ்வரன் ஆகியோர் தொழில்நுட்ப உரையை நிகழ்த்தினார்கள்.


வேளாண்மை உதவி இயக்குனர் ரேணுகா நன்றி உரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு கருத்தரங்கமும் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலும் அளிக்கப்பட்டது .அதேபோல் நெல் கம்பு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விவசாய பயிர்களின் கண்காட்சியும், பாரம்பரிய உணவு கண்காட்சியும் ,இயற்கை விவசாயம் சார்ந்த கண்காட்சியும் இந்த நிகழ்ச்சியில்  இடம் பெற்றிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் ஏராளமானோர் பயன் பெற்றனர்

மேலும் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு குறைந்த நே ரத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பது எவ்வாறு என்பது குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

மாவட்ட ஆட்சியரின் சிறப்பு உரை

இந்தியா நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் கருதப்படுகிறது. அன்றைய காலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி, சத்தான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து, நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக விரைவில் அறுவடைக்கு வரக்கூடிய உணவுப்பொருட்களை இரசாயன உரங்களை பயன்படுத்தி, உற்பத்தி செய்து வருகின்றனர். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. 


          இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை அறிந்த மேலைநாடுகள், அவர்களது மக்களை ஊக்கப்படுத்தி இயற்கை விவசாயத்தில் ஈடுபட செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை விவசாயத்தில் உலகநாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்த நம் நாடு தற்பொழு உணவு பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. 


         விவசாயத்தை அழிவிலிருந்து மீட்க விவசாய நிலங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையினருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இயற்கையான சூழல் உருவாக்குவதற்கும், அனைத்து விவசாயிகளும் இயற்கை உரங்களை பயன்படுத்தி இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டும். 


          மேலும் அதிக மகசூல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒரே வகையான பயிர்களை தொடர்ந்து பயிரிடாமல் புதிய பயிர்களையும் பயிரிட வேண்டும். வேளாண்மைத்துறை அலுவலர்களின் ஆலோசனைகளை பெற்று இயற்கை வேளாண்மையில் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார். 








 தோட்டக்கலைத்துறையின் சார்பில், இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2 விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களுடன் கூடிய ஊக்கப்பரிசுகளும், விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் மூலம் இயற்கை முறையில் உற்பத்தி செய்த ஈடுபொருட்களை உலகளாவிய விற்பனை செய்ய ஒரு விவசாயிக்கு அங்கீகாரச் சான்றும், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 18 நபர்களுக்கு ரூ.50,000 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்

இந்நிகழ்வில் இயற்கை வேளாண்மை குறித்த தொழில்நுட்ப கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள். 




மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சுய விருப்பு நிதியின் கீழ் ரூ.4.5 இலட்சம் மதிப்பிலான ட்ரோன் கொள்முதல் செய்யப்பட்டு வேளாண்மை பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. உரம் மற்றும் மருந்து தெளிப்பதற்கு குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்னர் சாதாரணமாக உரம் தெளிப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 3 மணி நேரம் ஆகும். ஆனால் இந்த ட்ரோன் மூலம் 10 நிமிடத்தில் குறைந்த அளவிலான உரங்களை கொண்டு எளிதில் பணிகளை முடித்துவிடலாம். 


இக்கண்காட்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள், சொட்டுநீர் பாசனம், மண் ஆய்வகம், நவீன இயந்திரங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store