தேனி தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது
தேனியில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 11.03.2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள 2அரசு நிறுவனங்கள் மற்றும் 25 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
தொழில் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் National Council for Vocational Training- NCVT) மற்றும் தொழில் பயிற்சிக்கான மாநில கவுன்சில் State Council for Vocational Training-SCVT) முறையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற / பெறாத அனைத்து பயிற்சியாளர்களும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
ஐடிஐயில் சேர்ந்து பயிற்சி பெற இயலாத 8,10,12 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்விதகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி (Apprenticeship Training) பெற்று தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறலாம்.
இப்பயிற்சிக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.8,050/- வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், ஓராண்டு வயது வரம்பு சலுகையும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


