சின்னமனூரில் சரவண ஸ்டோர் ஜவுளி கடை கோலகோலமாக திறப்பு விழா நடைபெற்றது
தேனி மாவட்டம் சின்னமனூர் பழைய காவல் நிலையம் அருகில் ஸ்ரீ சரவணா சில்க்ஸ் புதிய ஜவுளி மாளிகை திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை , கோவை மற்றும் பல்வேறு இடங்களில் ஸ்ரீ சரவணா சில்க்ஸ் செயல்பட்டு வரும் நிலையில் சின்னமனூரில் மிக பிரம்மாண்டமாய் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையிலும் திண்டுக்கல் மண்டல தலைவர் கிருபாகரன் , மாநில துணைத் தலைவர் பெருமாள் , தேனி மாவட்ட செயலாளர் திருவரங்க பெருமாள் ,மாவட்ட முதன்மை துணை தலைவர் ஆர் கே உதயகுமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ எம் விக்ரமராஜா பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு பங்கேற்று பட்டுமாளிகையினை திறந்து வைத்தார்.
சின்னமனூர் நகர மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, சுந்தராம்பாள் காளிமுத்து, சக்தி கீதா ,அருணகிரிநாதன், மீனாதேவி கணேஷ், மணிமொழிகாளிதாஸ், பத்மா மாலா வெங்கடேஷ் குப்தா , சிக்கும் பிருந்தா ரவிச்சந்திரன், பெங்களூர் டி. முருகேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள் .தொடர்ந்து சின்னமனூர் காயத்திரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் விரியன் சுவாமி பங்கேற்று முதல் விற்பனை துவங்கி வைத்த நிலையில் சின்னமனூர் வசந்தம் ஏஜென்சியின் சாந்தி சிவகாமி நாதன் பங்கேற்று முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொருளாளர் அருஞ்சுனைக் கண்ணன் , துர்கா வஜ்ரவேல் சின்னமனூர் வர்த்தக சங்கம் நகர செயலாளர் தாமோதரன் ,நகர பொருளாளர் பாலகிருஷ்ணன் ,மாநில துணைத்தலைவர் நடராஜன், ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் நாராயணன் ,செயலாளர் ஆதிநாராயணன், ஆனந்தம் பட்டு சென்டர் சண்முகநாதன், மாவட்ட PRO வேல்முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்புதீன் ,மாவட்ட துணை தலைவர் முருகதாஸ் ,தேனி நகர முதன்மை துணைத் தலைவர் பிரபு , O.P. ஸ்டோர் குணசேகரன் மற்றும் சின்னமனூர் ரோட்டரி சங்க வர்த்தக சங்க நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்
மேலும் இந்த ஸ்ரீ சரவணா சில்க்ஸ் பட்டு மாளிகையில் முதல் தளத்தில் (தரை தளம்) டிசைனர் சாரீஸ், பின்னி சில்க், சாப்ட் சில்க் சாரீஸ் ,பூனம், காட்டன், ஒர்க் சேலைகள் ,கோரn மசிலின், சந்தேரி தஞ்சூரி ,காப்பர் சில்வர், ஜரிகை சாரீஸ் மற்றும் பலவகை ரகங்களும் ,முதல் தளத்தில் பிரமாண்ட முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பட்டு பிரிவுகளும் இரண்டாம் தளத்தில் ஆடவர்களுக்கான அனைத்து ரக துணிமணிகளும் மிகப் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது













