எரசக்கநாயக்கனூரில் அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில் உற்சவ விழா:-
தேனி மாவட்டம்,சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் அமைந்துள்ள நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பழமையான அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவில் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,மகா தீபாராதனை,சிறப்பு அலங்காரத்துடன் பூஜை,பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்து பக்தர்களால் திருவீதி உலா நடைபெற்றது.மேலும், நேர்த்திக்கடனாக அம்மன் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும்
,கன்னத்தில் அலகு குத்தியும்,அக்னிசட்டியுடன் தனது பிள்ளையை முதுகில் சுமந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை நினைத்து வீதி உலா வந்த பொழுது பொதுமக்களும்,பக்தர்களும் பக்தி பரவசத்தில் அம்மன் பெயரைக் கூறி கோஷம் எழுப்பினர்.பிரம்மாண்டமாக அடுக்கடுக்காக முளைப்பாரியும் நேர்த்திக்கடனாக பக்தர்களால் கோவில் முன்பாக அமைத்து வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர்.மிகவும் சக்தி வாய்ந்த திருக்கோயில் கருமாரியம்மனை முழுமனதோடு பக்தர்கள் வழிபடுவதால் குழந்தை பேறு மற்றும் சகல செல்வங்களும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.உற்சவ திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை தலைவர் காளிமுத்து,செயலாளர் பழனிச்சாமி,பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற



