Type Here to Get Search Results !

தேனி அருகே ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாமில் தொடங்கி வைத்த ஆட்சியர்

தேனி அருகே ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி  முகாமில் தொடங்கி வைத்த ஆட்சியர்




தேனி மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வீரபாண்டி பேரூராட்சிகுட்பட்ட  சத்திரப்பட்டி பகுதியில்  ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இன்று (29.04.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

நம்ம தேனி மாவட்ட செய்திகள் தகவல் தளத்தில் இணைந்திட

Follow this link to join my WhatsApp group:


 https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt



விவசாயிகள் செய்திகள் 

தேன் தோட்டத்தில் வளர்த்து லாபம் ஈட்டும் பெண்கள் கடமலைகுண்டு

வீரபாண்டி கெளமாரியம்மன் 
கொடி அவரை விவசாயம்


சினிமா செய்திகளுக்கு 

ஜமின்தார் பரம்பரையா நடிகர் எம் .எஸ் பாஸ்கர் 


பாக்கிய ராஜ் - கமல் நேருக்கு நேராக

மோதல் ஜெயித்தது யார்



போடி 

வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஆட்டுக் கொல்லி நோயும் ஒன்றாகும். இநோய் Morbili Virus வகையைச் சார்ந்த ஒரு கொடிய வைரஸ் தொற்றாகும். இக்கிருமியானது நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீர், கண்ணீர் மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் விரைவில் பரவக்கூடியது. இந்நோயினால் அதிக காய்ச்சல், கழிச்சல், இருமல், மூக்கிலிருந்து சளிவடிந்து உறைதல், வாயின் உட்புறம் ஈறு மற்றும் நாக்கில் அதிக உமிழ்நீர் சுரத்தல் மற்றும் தீனி உட்கொள்ளாத நிலை ஆகியவை ஏற்பட்டு ஆடுகள் இறக்க நேரிடும். இந்நிலை ஆடு வளர்ப்போருக்கு பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். 



இதனை தடுப்பதற்காக, கால்நடை நலம் மற்றம் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் 1.06 இலட்சம் செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள்  இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக 1.43 இலட்சம் மருந்துகள் வரப்பெற்றுள்ளது. தடுப்பூசிப்போடும் பணி இன்று முதல் (29.04.2024) தொடங்கப்பட்டு 28.05.2024 வரை 30 நாட்களுக்கு தடுப்பூசிப்போடும் பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. 



          அதன்படி, இன்றைய தினம் வயல்பட்டி அருகிலுள்ள  சத்திரப்பட்டி கிராமத்தில்  ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடக்கி வைத்து, பார்வையிட்டார்கள். சத்திரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 298 ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.



இம்முகாமில் ஆடுகளுக்கு பிரத்யேகமாக பார்கோடுடன் கூடிய வெளிரிய ஊதா நிற காது வில்லைகள் அணிவிக்கப்பட்டது.  மேலும், ஆடுகள் மற்றும் உரிமையாளர்களின் விவரங்கள் பாரத் பசுதான் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. 





எனவே ஆடு வளர்ப்போர் நான்கு மாத வயதிலுள்ள ஆட்டுக்குட்டிகள்              மற்றும் சினையற்ற ஆடுகள் தவிர பிற அனைத்து ஆடுகளுக்கும்                   ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம்.



இம்முகாமில் மண்டல இணை இயக்குநர் கோயில்ராஜா, உதவி இயக்குநர்கள் மரு.பாஸ்கரன்(கால்நடை நோய் புலனாய்வு பிரிவு),  மரு.சுப்ரமணியன் (பெரியகுளம்), மரு.சிவரத்னா (உத்தமபாளையம்) உள்ளிட்ட பலர் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store