பஞ்சமி நிலங்களை உரிய நபர்களுக்கு வழங்க கோரி தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் 9 ஏக்கர் 3 சென்ட் அளவில் பஞ்சமி நிலங்கள் உள்ளது என்றும்
அதனை தனிநபர் முறைகேடாக ஆக்கிரமித்து வருகிறார் என்றும், இதனால் அந்த பஞ்சமி நிலங்களை உரிய நபர்களுக்கு வழங்கி ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையில் மனு அளித்தனர் இந்த நிகழ்வின்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்