Type Here to Get Search Results !

ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டியில் கால்வாய் நீர் தேங்குவதால் நோய் பரவி வருகிறது என்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு

 ஆண்டிபட்டி அருகே  அரப்படித்தேவன்பட்டியில் கால்வாய் நீர் தேங்குவதால் நோய் பரவி வருகிறது என்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு



தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் குன்னூர் மற்றும் திருமலாபுரம் ஆகிய இரு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்தான் அரப்படிதேவன்பட்டி கிராமம் .இந்த கிராமமானது தேனி -மதுரை சாலையில் அமைந்துள்ளது .மேலும் தேனி - மதுரை சாலையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வீடுகள்  உள்ள நிலையில் தெற்கு பகுதியில் சுமார் 500 வீடுகளுக்கும்  வடக்கு பகுதியில் நூறு வீடுகளுக்கு மேலும் உள்ளன ..வடக்கு பகுதியில் அமைந்துள்ள வீடுகள் அனைத்தும் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு பகுதியானது  தாழ்வான பகுதியாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த பகுதியில்  கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து பயன்படுத்தப்படும் கழிவுநீர் அனைத்தும் மேற்கு பகுதிக்கு வரும்  நிலை உள்ளது.


கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் நீர் அனைத்தும் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு வந்து அதனைத் தொடர்ந்து இந்த கிராமத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாலையினை கடந்து ஓடையின் வழியாக  சென்று வைகை அணையில் கலந்து விடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்


தற்பொழுது கிராமத்தின் மேற்கே மதுரை தேனி சாலையிலிருந்து  இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் தற்போது தார் சாலை போடப்பட்டு வருகிறது .இந்த தார்சாலை போடுவதினால் இந்த கிராமத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தையும் மேற்குப் பகுதிக்கு செல்லாமல் ஒரே இடத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது .அதை போல் இந்த பகுதியில் சரியான சாக்கடை கால்வாய் வசதி இல்லை , அதே நேரத்தில் சாக்கடை  தண்ணீர் அனைத்தும் அந்த கிராமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள வீடுகள் உள்ள பகுதிகளிலே தேங்கி நிற்கின்றன



மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில் இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன என்றும் கிராமம் உருவாகுவதற்கு முன்பாக இந்தப் பகுதியில் உருவாகும் கழிவுநீர் அனைத்தும் மேற்குப் பகுதிக்கு சென்று ஓடையின் வழியாக சென்றது என்றும் தற்பொழுது சாலை அமைத்து அந்த ஓடையினை தடுத்து நிறுத்தியதாலும் ஓடை ஆக்கிரமிப்பு உள்ளதாகவும் இதனால் தங்கள் பகுதியிலேயே சாக்கடை  கழிவுநீர் தேங்கி நிற்கிறது என்றும் ,இதனால் தங்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன என்றும் ஏற்கனவே ஒருவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து உயிரிழந்ததாகவும் ,தற்பொழுது மற்றொரு நபருக்கு இந்த கழிவு நீர் தேங்குவதால்  நோய் பரவி உள்ளது என்றும் ,இதனை கருத்தில் கொண்டு அரசு இந்த பகுதியில் சரியான சாக்கடை கால்வாய் அமைத்து அந்தக் கழிவுநீர் அனைத்தும் ஓடைப்பகுதிக்கு சென்று விடும் வகையிலும் மேற்கு ஓரத்தில் தற்பொழுது போடப்பட்ட வரும் தார் சாலைக்கு பாலம் அமைத்து கழிவுநீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் ,


மின்சாரத்துறை மூலம் வைக்கப்பட்டு இருக்கும் மின் மாற்றிப் பகுதிகளில் தற்பொழுது கால்வாய் தண்ணீர் அனைத்தும் தேக்கப்படுவதினால் மின்மாற்றி எந்த நேரத்திலு சாய்ந்துவிட வாய்ப்புள்ளது என்றும் ,பல்வேறு உயிர்கள் சேதம் ஆவதற்கு  முன்பாக சாக்கடை கால்வாய் அமைத்து மின் மாற்றி உள்ள பகுதிகளில் நீர் தேங்காமல் இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store