கானா பாடல் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதல்வருக்கு மனு அளித்தனர்.. இந்த மனுவில் சென்னையை சேர்ந்த இசைவாணி என்பவர் கானா பாடல் பாடும் பாடகியாக உள்ளார் என்றும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு " ஐ ஆம் சாரி ஐயப்பா நான் உள்ள வந்தா என்னப்பா ?" என்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பாடலை பாடி உள்ளார் என்றும் இதனால் இந்துக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து சர்ச்சைக்குறிய அந்த தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும்
, தமிழக அரசு சார்பில் சமீப காலமாக தவறு செய்த நபர்களை தனிப்படை அமைத்து சிலரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவதைப் போல் கானா பாடகி விசயத்திலும் இசை வாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தேனி மாவடத்தின் இந்து எழுச்சி முன்னனி தேனி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் மனு அளித்தனர்


