Type Here to Get Search Results !

கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகள் தென்னை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தியது

கடமலைக்குண்டு  அருகே காட்டு யானைகள் தென்னை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தியது 



தேனி மாவட்டம்  கடமலைக்குண்டு கிராமம் அருகே  மேலப்பட்டி அமைந்து உள்ளது . இந்த கிராமத்தின் வைகை ஆற்றங்கரையில் தோட்டம் வைத்துள்ள ஜெயா ( காளீஸ்வரன்) மேலப்பட்டி என்பவருக்கு  கடமலைக்குண்டு பகுதியில்  3½ ஏக்கர் தென்னந் தோப்பு உள்ளது. இந்த தே ாப்பில் 6 ஆண்டுகளான 350 தென்னை மரங்கள்  உள்ளது.


இந்நிலையில் 26.11.2024-ந் தேதி நள்ளிரவு கூட்டமாக வந்த  யானைகள்  ஜெயா என்பவரது தென்னந்தோப்பில் இருந்த 50-தென்னை மரங்களை பிடுங்கி சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கண்டமனூர் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறிச் சென்றுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store