76 வது குடியரசு தினம் பாஜக அலுவலகத்தில் கொடி ஏற்றி கொண்டாட்டம்
தேனி ஐடிஐ அலுவலகம் முன்பாக உள்ள தேனி மாவட்ட பாஜக அலுவலகத்தில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியினை தேனி மாவட்டத்தின் பாஜக தலைவர் இராஜபாண்டியன் முன்னால் மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் முன்னிலையில் கொடியேற்றினார் .
தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்தியாவிற்கு குடியரசு தினம் எப்படி வந்தது என்றும் குடியரசு தின வரலாறை பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார் .
அலுவலக வாளகத்தில் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வில் பாஜகவை சேர்ந்த தேனி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்






