ஜல்லிக்கட்டு போட்டியினை காண வந்த தேனியை சேர்ந்த நபர் காளை முட்டியதில் உயிரிழப்பு
உலகில் மிகவும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் புகழ்வாய்ந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த பொங்கல் தினத்தில் ஜனவரி 16ம் தேதி அன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று கண்டுகளித்தனர் .அந்த வகையில் தேனியை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டியினை காண வந்துள்ளார். அப்பொழுது அவரை ஜல்லிக்கட்டு காளை முட்டியில் பலத்த காயமடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியினை காண சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தேனி மாவட்டத்திற்கான தகவல் தளம்
நீங்களும் உங்கள் செய்திகளை அனுப்பலாம்

