ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாணவரணி சார்பில் மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாணவர் அணி மாவட்ட செயலாளர் கோட்டைச்சாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது
இந்த மனுவில் வருகின்ற 2-2 - 2025 ஆம் தேதி அன்று பழைய பேருந்து நிலையம் முதல் பங்களா மேடு வரை ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்று ஆடல் பாடல் விளையாட்டுகள் என்று கலாச்சார சீர்குலைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றும்.இதில் பெற்றோருக்கு தெரியாமல் இளைஞர்கள் பெண்கள் பங்கேற்க உள்ளதால் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் ,மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்களுக்குள் மோதல் ஏற்பட்டு உள்ளது என்றும் ,தற்பொழுது தேனி நகர் பகுதியில் மேம்பாலம் வேலை நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து இடைஞ்சல் அதிகமாக உள்ளது என்றும், இந்த நேரத்தில் போக்குவரத்து சாலையினை மறித்து ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்தினால் மாணவர்கள் , பெண்கள் , வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு இதனால் சமுதாய சீர்குலைவு நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும்
இதனால் இந்த நிகழ்ச்சியினை ரத்து செய்ய வேண்டும் என்றும் பெண்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்க கூடாது என்றும் மனு அளித்தனர். இந்த நிகழ்வின் போது அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாணவரணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்



