தேனி மாவட்டத்தின் 19 வது புதிய கலெக்டராக ரஞ்ஜீத் சிங் பதவி ஏற்பு
தேனி மாவட்ட கலெக்டராக இருந்து வந்த ஷஜீவனா அரசு கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்ஜீத் சிங் தேனி மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தேனி மாவட்ட புதிய கலெக்டர் ரஞ்ஜீத் சிங் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிய கலெக்டர் பொறுப்பேற்றுள்ள ரஞ்ஜீத் சிங் இவர் 2015 பேட்ஜ், 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரஞ்ஜீத் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்.குன்னூர், நாகப்பட்டினத்தில் பணியாற்றியவர்.கால்நடை பராமரிப்புத் துறையின் துணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த ஜூலை 2024 ல் நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியராக இருந்த ரஞ்ஜீத் சிங் சேலம் மாநகராட்சியின் 25-வது ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் தேனி மாவட்டத்தின் 19-வது புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு அலுவலக ஊழியர்கள் மலர் கொத்துக் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதிய கலெக்டராக பதவி ஏற்றுள்ள ரஞ்ஜுத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேனி மாவட்டத்தில் விடுபட்டுள்ள அரசு திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துவேன் என்றும், தேனி மாவட்டம் வனப்பகுதி நிறைந்த மாவட்டம் என்பதால் வனத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன். அதுபோல பொதுமக்களும், அலுவலர்களும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். செல்போனில் தொடர்பு கொள்ளும் போது அழைப்பை எடுக்கவில்லை என்றால் திரும்ப அந்த அழைப்பிற்கு சென்று அழைத்தவர்களின் கோரிக்கை குறித்து கேட்டு தெரிந்து கொள்வேன். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அரசு திட்டப்பணிகள் அனைத்தையும் நிறைவேற்றதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று கலெக்டராக பொறுப்பேற்றுள்ள ரஞ்ஜீத் கூறினார். மேலும் தேனி மாவட்ட கலெக்டராக பதவியேற்கும் போது அரசு சார்ந்த கோப்புகளில் கையெழுத்திட்டார்.



