வீரபாண்டி கெளமாரியம்மன் ராட்டினம் ஏலம் 3.06 கோடிக்கு ஏலம் விடப்பட்டது
தேனி அருகே வீரபாண்டி முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது .மேலும் இந்தத் திருக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் .அதேபோல் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 8 நாட்கள் நடைபெறும் .இந்த எட்டு நாட்களிலும் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தியும் வருகின்றனர்.
காவடி எடுத்தால் அக்கினி சட்டி எடுத்தல் மற்றும் பல்வேறு வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக நேர்த்திக்கடன்களை செலுத்தி வரும் நிலையில் இந்த திருவிழாவின்போது பொதுமக்கள் அதிகமாக வருகை புரிவதால் அவர்களின் பொழுதுபோக்குக்காக ராட்டினங்கள் பல்வேறு மாயாஜால அரங்குகள் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்கப்படுவது வழக்கம் .இதனால் ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வருடந்தோரும் ஏலம் விடுவது வழக்கம். இதே போல் 2025 ஆம் ஆண்டு திருவிழா இந்த வருடத்தில் மே 6 முதல் 13ம் தேதி வரை இரவு, பகலாக நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் (மார்ச் - 26) ராட்டினங்கள் ஏலம் விடப்பட்டது இந்த ராட்டினம் ஏலம் நிகழ்வில் ஏராளமான ராட்டினங்கள் எடுக்கும் வியாபாரிகள் பங்கேற்றனர் .
தேனி பகுதியை சேர்ந்த விஜயராஜன் என்பவர் 3.06 கோடிக்கு ராட்டினங்களை ஏலத்தில் எடுத்துள்ளார். சென்ற வருடத்தை காட்டிலும் இந்த வருடம் அதிகமான ஏலம் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது




