போடியில் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு சதுரங்கப் போட்டி நடைபெற்றது
தேனி மாவட்டம் போடியில் போடி சேனைதலைவர் நர்சரி&ப்ரைமரி பள்ளியும் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியும் இணைந்து 20.03.25 இன்று மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சதுரங்க போட்டி நடத்தியது . பள்ளி செயலாளர் K. சொர்ணமணி தலைமையில் நடைபெற்ற இந்த போட்டிகளை பள்ளி முதல்வர் உமாராணி திலகர் தொடங்கி வைத்தார், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர். S.தர்மராஜ் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.போட்டி ஏற்பாடுகளை தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமியின் தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S. சையது மைதீன் செய்திருந்தநிலையில் முதன்மை நடுவராகவும் செயல்பட்டார்.
வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்
Under - 8 பிரிவில்
1.R.கவின் 2, G. வருணிக்காஸ்ரீ 3, M. யோகதர்க்ஷன் ஆகியோரும்
Under- 11 பிரிவில்
1, V.சரவணகார்த்திக் 2, S.சஸ்மித் 3,A. கிஷ்ஸோர் ஆகியோரும் வெற்றி பெற்றனர்
இதில் Under - 11 பிரிவில் முதலிடம் பெற்ற மாணவர் V.சரவணகார்த்திக் வரும் 30-ம் தேதி கரூரில் நடைபெறும், மாநில செஸ் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்




