தேனியில் இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது
தேனியில் இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குமரேசன் பாண்டியன் தலைமையிலும் இந்து முன்னணியில் மாவட்ட தலைவர் முருகன் முன்னிலையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் அடையாள அட்டையிணை வழங்கி சிறப்பித்தனர்.மேலும் இந்து வியாபாரிகள் நல சங்கத்தில் சேருவதனால் இருக்கும் நன்மைகளைப் பற்றியும் இந்த கூட்டத்தில் விளக்கப்பட்டது
மேலும் இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் உமைய ராஜ் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் பங்கேற்று விழா ஒருங்கிணைப்பினை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்




