தேனியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
தேனியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவன தலைவர் விஜயின் 51வது பிறந்தநாள் முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஒலிபெருக்கிகள் வைத்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தேனி பங்களா மேட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் இளைஞர் அணி ராஜ பிரபு மற்றும் 28 வது வார்டு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது .
முதலில் 28 வது வார்டு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது தொடர்ந்து தேனி பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு என் ஆர் டி நகர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் 28 வது வார்டு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிறப்பான முறையில் அன்னதானம் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்



