தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் காணொளி மூலம் சமுதாயக் கூடத்தினை திறந்து வைத்த தமிழக முதல்வர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த கிராமத்தின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய சமுதாய கூடம் கட்டப்பட்டது . இந்த சமுதாய கூடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் .
இந்நிலையில் சமுதாயக் கூடம் கட்டிய இடத்தில் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார் .
இந்த நிகழ்வின் போது திமுகவின் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் ராஜாராம் ஆண்டிபட்டி பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் ஆண்டிபட்டி யூனியன் இன்ஜினியர் நாகராஜ் ,அம்மச்சியாபுரம் கிளை செயலாளர் ராமர் குன்னூர் கிளை செயலாளர் பீமராஜன் கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்வில் ஒப்பந்ததாரர் தனிலா பில்டர்ஸ் செல்லப்பாண்டியன் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்





