Type Here to Get Search Results !

ஆண்டிபட்டி தேவாலயத்தில் புனித வெள்ளி நாளில் கிறிஸ்தவர்கள் சிலுவை சுமந்து ஜெபம் செய்து வழிபாடு

ஆண்டிபட்டி தேவாலயத்தில் புனித வெள்ளி நாளில் கிறிஸ்தவர்கள் சிலுவை சுமந்து ஜெபம் செய்து வழிபாடு



     தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அடைக்கல மாதா தேவாலயம், சி.எஸ்.ஐ.ஆலயம், எப்.பி.எம் சர்ச் உள்ளிட்ட கிறிஸ்தவர்களின் ஆலயங்களில் புனித வெள்ளி நினைவு கூறப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.


 கிறிஸ்தவர்களின் தவக்கால முப்பெரும் நாட்கள் என்பது மார்ச் மாதம் வரும் பெரிய வியாழன்,புனித வெள்ளி திரு விழிப்பு ,உயிர்ப்பு ஞாயிறு மாலை வரை மூன்று நாட்களை குறிக்கும். இயேசுவின் பாடுகள் ,இறப்பு, அடக்கம் மற்றும் உயிர்பினை இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் நினைவு கூறுவர்.



 அதனை முன்னிட்டு  ஆண்டிபட்டி அடைக்கலமாதா தேவாலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது .அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வந்திருந்து  பாதிரியார் மார்ட்டின் தலைமையில், இயேசு சிலுவை சுமந்து பல துயரங்களை கடந்து ,சிலுவையில் அறையப்பட்டு ,அடக்கம் செய்யப்படும் நிகழ்வை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு நிலைகளாக சிலுவையை சுமந்தபடி சென்றனர் .14வது நிலையை அடையும் போது இயேசுநாதர் இறக்கும் நிலை நினைவு கூறப்படும் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு அமைதி காத்தனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்து வழிபட்டனர் .அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சனிக்கிழமை இரவு 12 மணிக்கு மேல் உயிர்ப்பு ஞாயிறு விழா கொண்டாடப்படும் என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store